நடிகர் கமலஹாசன் இரு இந்து விரோதி என்றும், வக்கிரமாக பேசக் கூடியவர் என்றும், தலைவருக்கான தகுதியே இல்லாதவர் என்றும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கமல் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவருக்கு அந்தத் தகுதி இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் எச்,ராஜா, கமலஹாசன் முதுகெலும்பில்லாதவர் என கடுமையாக பேசியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எச்.ராஜாவை, எலும்பு நிபுணர் என கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள, முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குத் தான் தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறினார்.

பிரச்சனை என்று வரும்போது ஓடிப்போய் விடுபவர்தான் கமல் என்று சொன்ன எச்.ராஜா, அவர் முதுகெலும்பில்லாத ஒரு கோழை என்று மீண்டும் என குற்ம்சாட்டினார்.

கமல் ஒரு இந்து விரோதி என்றும் என்றும் வக்கிரமாய் பேசக்கூடியவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை  ஆதரிப்பவர் கமலஹாசன் என்றும் தலைவருக்கான  தகுதியே இல்லாதவர் என்றும் எச்,ராஜா குற்றம்சாட்டினார்.