அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டுவரும் கமல்ஹாசன், ஈரோட்டில் அரசியல் பயணம் செய்துவருகிறார். ஈரோட்டில் உள்ள பெரியாரின் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும் தனது ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றினார்.

ஈரோடு அரசியல் பயணத்தின் ஒருபகுதியாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியிருப்பது தொடர்பாக கமலிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ராகுலின் கருத்து மனிதநேயத்தை காட்டுகிறது. ஆனால், ராஜீவ் கொலையாளிகளுக்கு தேவைப்படுவது சட்டத்தளர்வு என்றார்.

கிறிஸ்தவ அமைப்புகள்தான் உங்களுக்கு(கமல்) நிதியுதவி செய்வதாக இந்து அமைப்புகள் கூறுகின்றனவே? என கேட்டதற்கு, இதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. அர்த்தமற்ற குற்றச்சாட்டு என பதிலளித்தார்.