kamal in thoothugudi
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரழந்துள்ளனர். இதனால் தூத்துகுடி நகரமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் யாவும் நிறுத்தப்பட்டன. தூத்துகுடியிலிருந்து வெளியே அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துத்குடி நகரத்திற்கு 144 தடைஉத்தரவு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு தலைவர்கள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மக்கள் மய்ய தலைவர் கமலஹாசன் நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்நிகழ்வு ஒரு அரச பயங்கரவாதம் என்றும் அமைதியான போராடிய மக்களின் போரட்டத்திற்கு இரத்தத்தினால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி மக்களை மக்கள் மய்யத் தலைவர் கமலஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்
