Asianet News TamilAsianet News Tamil

அப்துல் கலாம் வீட்டில் கமல்ஹாசன்…. அவரது சகோதரர் முத்து மீரானிடம் ஆசி பெற்றார்!!

Kamal hassan in abdul kalam house
Kamal hassan in abdul kalam house
Author
First Published Feb 21, 2018, 8:03 AM IST


நடிகர் கமலஹாசன் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்துக்குச் சென்று, அவரது சகோதரர் முத்து மீரானிடம் ஆசி பெற்றார், கலாமின் பேரன் சலீம் கமலை வரவேற்று நினைவுப்பரிசு அளித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். இன்று ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி கமலஹாசன் நேற்று விமானம்மூலம் சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து அவர் சாலை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்தார். அங்கு கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Kamal hassan in abdul kalam house

இதைத் தொடர்ந்து இன்று காலை சரியாக 7.35  மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வீட்டிற்கு  சென்றார். அவரை அப்துல் கலாமின் பேரன் சலீம் வரவேற்று அமர வைத்தார்.

Kamal hassan in abdul kalam house

இதையடுத்து அப்துல் கலாமின் சகோரர் முத்து மீரான் மரைக்காயர் கமலஹாசனை  வரவேற்றார். மவரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். இதைனையடுத்து முத்து மீரான் மரைக்காயரின் மனைவி மற்றும் உறவினர்கள் கமலுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படடார்.

மேலும் அப்துல் கலாம் வீட்டில் உள்ள அருங்காட்சியகத்தை கமல் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் அப்துல் கலாமின் நினைவிடத்துக்கு செல்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios