திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், திருவள்ளூர் எம்.எல்.ஏ.வுமான வி.ஜி.ராஜேந்திரன் மகள் பிரியதர்ஷினி, பாலிமர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் வருண் ஆகியோரின் திருமணம் ஸ்டாலின் தலைமையில் இன்று திருவான்மியூரிலுள்ள கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், துரைமுருகன், கனிமொழி எம்.பி மற்றும் திமுகவின்  முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திமுகவை ஊழல் கட்சி என்று கமல்ஹாசன் விமர்சித்து வந்த நிலையில், இன்று முரசொலியில் பாஜகவின் அழுத்தத்திற்காக தன்னிலை மறந்து திமுகவை விமர்சிக்கிறார் எனமக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை கடுமையாக விமர்சித்து சிலந்தி என்ற பெயரில் பெரிய  கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமண விழா மேடைக்கு கமல்ஹாசன் வந்தபோது, ஸ்டாலின் எழுந்து நின்று வரவேற்றார்.

இருவரும் கைகுலுக்கிக் கொண்டு, கட்டிப்பிடித்து பரஸ்பரம் செய்துகொண்டு அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதேபோல,  மத்திய அமைச்சர் பொன்னார் மேடைக்கு வந்தபோது, அவரை ஸ்டாலின் உள்ளிட்டோர் எழுந்து நின்று வரவேற்றனர்.