இன்று பிற்பகல் பொள்ளாச்சியில் அவரது கட்சி  சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய கமல்ஹாசன், ஆளுங்கட்சியையும் மற்றும் இன்னபிற கட்சி அரசியல்வாதிகளையும் வெளுத்துக் கட்டிவிட்டார் வழக்கம்போல. 

அதன்பிறகு யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென்று, ‘ என் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா இருவரும் இந்த கட்சியின் தலைவர்களாக வந்து உட்காரவே மாட்டார்கள். வாரிசு நிர்வாகம் நிச்சயம் கிடையாது. உறுதியாக சொல்கிறேன். இது என் கட்சியில்லை, உங்கள் கட்சி. 

நம்மவர்! நம்மவர்! என்று நீங்கள் என்னைப் பார்த்து சொல்கிறீர்கள். நானோ உங்களை ‘நம்மவர்’ என்கிறேன். நம்மவரென்றால் நாம் எல்லாரும் சேர்ந்துதான். இங்கே எதுவுமே சரியில்லை,  எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. 

ராமருக்கு அணில்களாக நாம் இருந்த காலமெல்லாம் போதும், இனி வில்லெடுத்து வேட்டையாட துவங்குவோம்.” என்று பொளந்து கட்டியிருக்கிறார் மனிதர். 

ஒலக நாயகன்னா ச்சும்மா ஸ்க்ரீன்ல சீன் போட்டுட்டு போவாருன்னு நினைச்சீங்களா!...சிங்கம்டா! என்று சிலிர்க்கிறார்கள் அவரது தொண்டர்கள்.