Kamal has fixed Label mike in his shirt Ennore visit
கமல்ஹாசன் குறித்து அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் தங்கள் வட்டாரத்துக்குள் யதார்த்தமாக பகிரும் ஹாட் டயலாக் ஒன்று உண்டு. அது ‘எந்த குற்றச்சாட்டையும் ஆதாரமில்லாமல் சொல்ல மாட்டார்! எந்த குறும்பையும் ஆதாரத்தோடு செய்ய மாட்டார்.’என்பதுதான்.
ட்விட்டர் வட்டத்திலிருந்து வெளியேறி கொசஸ்தலை ஆற்றில் கமல் களமிறங்கியது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விசிட்டின் போது கமல்ஹாசன் தனது சட்டைப்பையில் மாட்டியிருந்த மினி மைக், அவரை நேரில் சந்தித்த மக்கள் மற்றும் போட்டோவில் பார்த்தவர்களின் புருவத்தை உயர வைத்திருக்கிறது.
ஏன் இந்த மைக்? என்பதுதான் எல்லோரின் கேள்வியும். தான் பொதுவெளிக்கு செல்கையில் நிச்சயம் மக்கள் கூடுவார்கள் என்பது தெரியும்! அப்போது அவர்கள் மத்தியில் தான் பேசுவது தெளிவாக கேட்பதற்காக மைக் வைத்திருந்திருக்கலாம்! என்றால் அதற்கு இந்த ரக மைக் தேவைப்படாதே? இந்த மைக் கேமெராவுடன் அலைவரிசை வழியாக இணைக்கப்பட்டு துல்லியமான ரெக்கார்டிங்கிற்கு பயன்படுவதாச்சே!

ஒரு குரூப்போ ‘ஒரு வேளை கமலின் இந்த விசிட்டும், மக்கள் மத்தியில் அவரது பேச்சுக்களும் லைவ்வாக படமாக்கப்பட்டனவோ?’ ஒரு தினுஷாக கிளப்பியிருக்கிறார்கள்.
கொசஸ்தலை ஆற்றில் முதல் புள்ளி வைத்திருக்கும் கமல் இனி தமிழகமெங்கும் சர்ப்பரைஸிங்காக பல இடங்களில் இப்படி விசிட் அடிப்பார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது சட்டைப்பையில் இந்த மைக் இருக்குமென்றே தெரிகிறது!
ஆதாரம் முக்கியம் அமைச்சரே!- என்பது கமலுக்கு நன்றாக விளங்கியிருக்கிறது.
