Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடிக்கு ட்வீட் போட்டு அதிமுகவிற்கு ரீவிட் அடித்த கமல்..!

நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ முதலில் இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kamal Haasan urges PM Modi to put an end to banner
Author
Tamil Nadu, First Published Oct 2, 2019, 6:02 PM IST

நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ முதலில் இந்த பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளிக்கரனையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது அதிமுக பேனர் விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை எந்த அரசியல் நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கக்கூடாது என்று தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவிட்டனர். 

Kamal Haasan urges PM Modi to put an end to banner

ஆனால், அதிமுக உத்தரவிட்டு இன்னும் 20 நாட்கள் கூட ஆகாத நிலையில் அக்டோபர் 11-ம் தேதி மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையம் முதல் மகாபலிபுரம் வரை பேனர் வைக்க அனுமதிக்குமாறு தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Kamal Haasan urges PM Modi to put an end to banner

இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் அலுவலகத்தை குறிப்பிட்டு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகமும், தமிழர்களும் சுபஸ்ரீயின் இழப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், உங்கள் வருகைக்கு பேனர்கள் வைக்க தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. பிரதமரான நீங்கள் ஒருமுன்னோடியாக திகழ, முதலில் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்தால் தமிழர்கள் மீதான உங்கள் அக்கறை பிரதிபலிக்கும். அதேசமயம் உங்களுக்கும் பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்க்கும் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios