Asianet News TamilAsianet News Tamil

கமல்ஹாசனின் மார்கெட்டிங் அரசியல்... காய்ச்சி எடுத்த கவுதமி..!

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

Kamal Haasan's marketing politics ... Gautami distilled
Author
Tamil Nadu, First Published Mar 29, 2021, 12:02 PM IST

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும் என நடிகை கவுதமி விமர்சித்துள்ளார்.Kamal Haasan's marketing politics ... Gautami distilled

கமல்ஹாசனின் நெருங்கிய தோழியாக இருந்தவர் நடிகை கவுதமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனுடனான நட்பை முறித்து கொண்ட கவுதமி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் இவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் இவர் போட்டியிடவில்லை. இந்தநிலையில் நடிகை கவுதமி சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,  ’’கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அது பற்றி இனி பேசவேண்டாம்.

பாஜக தலைவர்களான வாஜ்பாய், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கடந்த 23 ஆண்டுகளாக இக்கட்சி மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அதன் காரணமாகவே பாஜகவில் இணைந்தேன். திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் தமிழகத்தில் அந்த கட்சிகளில்தான் சேரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

Kamal Haasan's marketing politics ... Gautami distilled

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும். ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும் போது இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது.Kamal Haasan's marketing politics ... Gautami distilled

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணியின் வாக்குகள் பிரியுமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி பிரிந்தால் அது அ.தி.மு.க.- பாஜக கூட்டணிக்கு தான் சாதகமாக இருக்கும்’’என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios