அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசனுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அந்தக் கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 

நாளை மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சை எடுத்துக் கொள்ள உள்ளார் என மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’கடந்த 2016ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமல்ஹாசனினி வலது காலில் முறிவு ஏற்பட்டது. அந்த முறிவினை சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொறுத்தப்பட்டது. அரசியல் மற்றும் சினிமாவில் கமல்ஹாசனுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அந்தக் கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையால் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 

மருத்துவர்களின் அலோசனை படி கமல்ஹாசனுக்கு வரும் 22ம் தேதி அன்று அக்கம்பியை அகற்றும் சிகிசை மேற்கொள்ளப்படவிருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்கு பின் கமல் நம்மை சந்திப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.