புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துணிவில்லாததாக தமிழக அரசு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை விரட்டியடிக்கிறனர்!: என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா சாடல். (அதெல்லாம் சரி! கருணாநிதியை தொடர்ந்து ஸ்டாலின் வாரிசாக தி.மு.க.வில் வளர்கிறார்னு கேப்டன் பேசிய பழைய ஆடியோவுக்கு, மகனை கட்சிக்குள் கொண்டு வரும் நீங்க இன்னும் பதில் சொல்லலையேக்கா)

* லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ. வெற்றி பெறுவது உறுதி!: என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். (காதுல மல்லிப்பூ வைங்க, கனகாம்பரம் வையுங்கல், பிச்சிப்பூ கூட வையுங்க. ஆனா வாழப்பூ வைக்காதீங்கோ! காது தாங்காதுங்கோவ்.)

* சேதப்பகுதிகளில் இருந்து வெளியேற வழி இல்லாததால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சுவர் ஏறி குதித்தார்! என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். (ஆமாண்ணே பூ-வ பூன்னும் சொல்லலாம், புய்ப்பமுன்னும் சொல்லலாம். நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்ணே! அதது நம்ம செளகரியம்ணே)

* நான் போதையில் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளனர். என்னைப் பற்றி என் ஆன்மாவுக்கு தெரியும். அதைவிட பலமானது எனக்கு எதுவுமில்லை. என்னை பற்றி இவர்கள் என்ன சொன்னாலும் கவலையில்லை! என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம். (என்ன வந்தாலும் கவலையில்லைன்னு சொல்லிட்டு ஆன்மா, பெண்மா, சத்துமாவுன்னு ஏன் மேடம் பேசிக்கிட்டு? போலாம் ரை போலாம் ரை!ன்னு போயிட்டே இருப்போம்)

* நடிகர் கமல்ஹாசனின் அறிக்கைகள், நடவடிக்கைகளை பார்க்கும்போது இன்னமும் அவர் அரசியல்வாதிக்கான அந்தஸ்தை பெறவில்லை என தோன்றுகிறது! என கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. (ஆமாண்ணே, அந்தஸ்தை பெறுவது எப்படின்னு நம்ம செல்லூரார், திண்டுக்கல்லார் மற்றும் ராசேந்திர பாலாஜியாரிடம் டியூஸன் படிக்க சொல்லலாம்ணே!)