Kamal Haasan commented that the Censor Board has not yet censored because the Board has already certified Mersal.

மெர்சல் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏற்கனவே சான்றிதழ் அளித்துள்ளதால் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம் என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் விமசகர்களின் வாயை அடைக்காதீர்கள், பேசினால் தான் இந்தியா ஒளிரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் மெர்சல். இப்படம் வெளியாகும் முன்பு பல சர்ச்சைகளின் காரணமாக இழுக்கடிக்கப்பட்டு வந்தது. 

ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. இதில் மத்திய அரசை விமர்சித்து கருத்துக்கள் பரப்பி இருப்பதால் குறிப்பிட்ட வசனங்களை நீக்குமாறு பாஜக வலியுறுத்தி வந்தது. 

இதைதொடர்ந்து வசனங்கள் நீக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மண்டல தணிக்கைக்குழு அதிகாரி மதியழகன் நடிகர் விஜயின் மெர்சல் திரைப்பட காட்சிகளில் யாரையும் பாதிக்கும் வகையில் வசனங்கள் இல்லை எனவும், காட்சிகளை நீக்கவேண்டும் எனில் தணிக்கைகுழுவிடம் மீண்டும் அனுமதி பெறவேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல், மெர்சல் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏற்கனவே சான்றிதழ் அளித்துள்ளதால் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் விமசகர்களின் வாயை அடைக்காதீர்கள், பேசினால் தான் இந்தியா ஒளிரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.