Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை சந்தித்தது ஏன்..? கமல் விளக்கம்

kamal explained why met rajinikanth
kamal explained why met rajinikanth
Author
First Published Feb 18, 2018, 3:07 PM IST


அரசியல் பயணத்தை தொடங்க இருப்பது குறித்து ரஜினியிடம் கூறியதாக கமல் தெரிவித்துள்ளார்.

வரும் 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்க உள்ள கமல்ஹாசன், அண்மையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சந்தித்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து பேசினார்.

ரஜினியும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துவிட்ட நிலையில், இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என இருவருமே கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து கமல் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், அரசியல் பயணத்தை தொடங்குவது தொடர்பாக எனக்கு பிடித்தமான நபர்களை சந்தித்து தெரிவித்து வருகிறேன். அந்த வகையில் ரஜினியை சந்தித்து தெரிவித்ததோடு, அழைப்பும் விடுத்தேன். வருவது அவரது விருப்பம் என தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்றும் நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே எனவும் கமல் விளக்கமளித்தார். அரசியல் ரீதியாக இருவரது கருத்தும் வேறாக இருந்தாலும் அது அரசியல். இது நட்பு என கமல் விளக்கமளித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios