kamal denied that the information of madurai meeting
பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என கமல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ம் தேதி அவர் பிறந்த ராமநாதபுரம் மண்ணிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் அரசியல் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, பிப்ரவரி 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கும் கமல், ராமநாதபுரம் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்துவிட்டு பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி முதற்கட்ட சந்திப்பை நிறைவுசெய்வார் என சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு ரசிகர்களிடம் பேசிய கமல், மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவல் பொய் என தெரிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
