குரங்கணி தீ விபத்தில் மீட்புப் பணிகளை துரிதமாகவும், சிறப்பாகவும் மேற்கொண்ட தமிழக அரசை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி அமைச்சர்களும் கமல்ஹாசனை சரமாரியாக விமர்சனம் செய்தனர்.

இதையடுத்துதான் கமலஹாசனுக்கு அரசியலில் குதிக்கும் எண்ணமே ஏற்பட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனைத் தொடர்ந்து தமிழக அரசை கமல் மிகக்கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் கடந்த மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கமல் முதன்முறையாக தமிழக அரசை மனம் திறந்து பாராட்டியுள்ளார். நேற்று தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட  காட்டுத் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தனதது முழுமையாக வருத்தத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவு செய்திருந்தார். இந்நிலையில் கோவை பீளமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், குரங்கணி தீ விபத்தில் துரிதமாக  செயல்பட்ட தமிழக அரசுக்கு மனம் திறந்து பாராட்டு தெரிவித்தார்.

நேற்று முதல் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு மீட்புப்பணிகளை  தமிழக அரசு விரைவான மேற்கொண்டதாக பாராட்டினர். தமிழக அரசு செய்யும் எல்லாவற்றையும் குறை சொல்லப் போவதில்லை என கூறிய கமல், இப்பிரச்சனையில் அரசின் துரித நடவடிக்கை அனைவரும் பாராட்டும்படி இருந்ததாக தெரிவித்தார்.

தமிழக அரசை நடிகர் பாராட்டியிருப்பது அரசியல் கட்சிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.