டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கேஜ்ரிவால் தனது தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் டெல்லியில் படிப்பதால், டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன” எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கெஜ்ரிவால்  டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் இந்தக் கருத்தைக் கூறியிருப்பார். கேஜ்ரிவாலிடம் இது குறித்து நான் கேட்க முடியாது. 

அவர் சொன்னது, ‘தமிழகத்திலிருந்து வரும் மாணவர்களுக்கெல்லாம் சீட் கிடைக்கும்போது, டெல்லி மாணவர்களுக்கு சீட் கிடைக்க மறுக்கிறது, 
அதற்கு காரணம் தனி மாநில அந்தஸ்து இல்லை’ என்பதாகத்தான் இருக்கும். மற்றபடி தேசிய ஒருமைப்பாட்டை விரும்பும் யாரும் அப்படி பேசியிருக்க மாட்டார்கள். மற்றபடி அவ்வாறு அவர் பேசியிருந்தால் அது தவறுதான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்