அரவக்குறிச்சி பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கரூர் நடுவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம் தெரிவித்து அவரது நாக்கை அறுக்க வேண்டும் என கூறினார். மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கமல் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இதனிடையே இந்தவழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டனர். அதன்படி இன்று கரூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டார்.