கமல் ரஜினி காருக்குள் ரகசிய சந்திப்பு...!  இருவரும் எடுத்த முக்கிய முடிவு..!

தமிழகத்தில் கமல் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தனி தனியாக கட்சி தொடங்கும் முனைப்பில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதுரையில்,தனது கட்சியை தொடங்கி வைத்தார் கமல் ஹாசன். இந்த நிகழ்ச்சியில்,டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,நடிகர் வையாபுரி, சிநேகன்  உள்ளிட்ட பல முக்கிய  நபர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில்,மறுபக்கம் ரஜினிகாந்தும் அவரது அரசியல் வேலையை துரிதப்படுத்தி உள்ளார்.மேலும்,அரசியல் கட்சி தொடங்கும் முன் நடிகர் ரஜினி காந்த்,தேமுதிக   தலைவர் விஜயகாந்த்,தேர்தல் அதிகாரி சேஷன் உள்ளிட்ட முக்கிய  நபர்களை  சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில்,சில முக்கிய தகவலை கமல்ஹாசன்  அவர் தொடர்ந்து எழுதி வரும்   கட்டுரையில் தெரிவித்து உள்ளார்.

அதில்," கட்சி தொடங்க  திட்டமிட்டு இருக்கும் தன்னுடைய முடிவை  அன்றே  ரஜினியை  ரகசியமாக  சந்தித்து  தெரிவித்ததாக  எழுதியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி..

பிக்பாஸ் நிகழ்ச்சி  நடைபெற்று வரும் சமயத்தில்,அருகில் காலா  படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்ததாகவும், திடீரென அவரை பார்த்து  தன்னுடைய அரசியல்  முடிவை சொல்ல முற்பட்டு, ரஜினிக்கு கால் செய்து சந்திக்கலாமா என  கேட்டாராம்  கமல்.

ரஜினி ஓகே சொல்ல,யாருக்கும் தெரியாமல் இருவரும் எங்கு வந்து பார்ப்பது என  திட்டமிட்டு காரில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தெரிவித்து உள்ளளர் .   

நான் எடுத்த முடிவு,மற்றவர்களுக்குத் தெரியும் முன் அவருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்தச் சந்திப்பு.“அப்படியா,எப்ப முடிவெடுத்தீங்க?”என்று ஆச்சரியமாகக் கேட்டார்.“மனதளவில் முடிவெடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான்” என்றேன்.

‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக் கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக் கொண்டதில் முக்கியமான வி‌ஷயம். ஆம், “ஒருவேளை எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்து விடக்கூடாது. அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும்” என்றேன். “அப்கோர்ஸ் கமல்”என்றார் அவர்.

முடிவெடுத்திருப்பதைச் சொல்ல அன்று சந்தித்தேன் என்றால், “கட்சி கட்டப் புறப்படுகிறேன்” என்று சொல்ல இப்போது சந்தித்தேன். “வரலாமா” என்று கேட்டேன். “சாப்பிட்டிட்டிருக்கேன். முடிச்சிடுறேன் வாங்க” என்றார். ஆனால், நான் போகும் போது சாப்பிட்டுக் கொண்டுதானிருந்தார்.

ஆம், அவ்வளவு சீக்கிரம் போய்விட்டேன். அதே புரிதலோடுதான் இருக்கிறோம். பேசுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

"ஆமாம்... நீங்ககூட உங்க ரசிகர்கள்கிட்ட, ‘ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்கனா எனக்குப் பொல்லாத கோபம் வரும்’ என்று சொன்னீர்கள் என்று கேள்விப்பட்டேன்” என்றார். “ஆமாம், வசவு அரசியல் நமக்குத் தேவையில்லை. நீங்களும் அப்படித்தான் இருக்கணும் என்று நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா, நீங்க கண்டிப்பா அப்படித்தான் இருக்கீங்கன்னு தெரியும். இல்லாத அரசியல் மாண்பை நாம் இருக்கச் செய்ய வேண்டும். நாமளாவது அதைச் செய்வோம்" என்றேன்.

ஆமாம், நாங்கள் நினைத்திருந்தால் வாடாபோடா நண்பர்களாகவே இருந்திருப்போம். ‘நாங்கள் அப்படி இல்லை’ என்று 25 வயது இளைஞர்களாக இருக்கும்போதே முடிவு செய்து விட்டோம்.... என  தெரிவித்து இருக்கிறார்.

மேலும், அவருடைய அரசியல் பயணத்தை பற்றி அதில்  தொடர்ந்து எழுதி உள்ளார்.