கலைஞர் எதை செய்தாலும் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கும். எதை பேசினாலும் அதில் ஆழமான கருத்து இருக்கும். இதை தன்னுடைய அரசியல் வாழ்கையில் மட்டுமல்ல....குடும்ப வாழ்கையில் கூட மிகவும் அற்புதமாக பயன்படுத்தியவர் தான் கலைஞர்...

கலைஞரின் மறைவு ஸ்டாலின் மற்றும் உறவினர்களை தாண்டி தொண்டர்கள் வேதனையில் உள்ளனர். இந்நிலையில் கலைஞாரின் அன்பு மகளான செல்வி  தன் அப்பா கருணாநிதி  பற்றியும், அவர் பிறந்த உடன் கலைஞர் எழுதிய  கடிதம்  பற்றியும் மனம் திறந்து பேசி  உள்ளார்.  

கலைஞர் மற்றும் அவரது அண்ணன்கள் அத்தை அத்தான் என அனைவரை பற்றியும் மனம் திறந்து பேசிய  செல்வி..இறுதியில் அவருடைய திருமண வாழ்க்கை பற்றி மிக அழகாக சிரித்துக்கொண்டே ரசனையாக பதில் அளித்தார்.

அதில், தான் பிறந்த உடனே, அப்பா அவருடைய அக்காவிற்கு....ஒரு கடிதம் எழுதினார். அதில், "செல்வனுக்கு செல்வி பிறந்தாள் " என்று மிக அழகாக அவருக்கே உண்டான பாணியில் தெரிவித்தார் கலைஞர்.

இன்னும் சொல்லப்போனால், எனக்கு குழந்தையிலேயே திருமணம் முடிந்தது என்று கூட கூறலாம். இதன் காரணமாகவே எனக்கு செல்வி என்றும், அப்பாவோட அக்கா மகனான, அவருக்கு பன்னீர் செல்வம் என்றும் பெயர் சூட்டினர் என குறிப்பிட்டு உள்ளார் செல்வி.