ஸ்டாலினுக்கு இப்படிப்பட்ட பள்ளியே தேவை இல்லை..! கலைஞரின் அதிரடி ஆக்ஷனை பற்றி வாய் திறந்த செல்வி..! 

கருணாநிதிக்கு மிகவும் செல்லப்பிள்ளையாக அவருடனே இருந்து மிகவும் அன்பாகவும் பொறுப்பாகவும்  கடைசி வரை கண் விழித்து பார்த்துக் கொண்டவர் கருணாநிதியின் மகள் செல்வி. 

கருணாநிதிக்கும், தயாளு அம்மாளுக்கும் பிறந்த தமிழரசு, அழகிரி, ஸ்டாலின் மற்றும் செல்வி ஆகியோரில், செல்வி தான் கலைஞரின் மனம் கவர்ந்த அன்பு மகள் என்பது ஊரறிந்த உண்மை...

கடந்த சட்டசபை தேர்தலின் போது, தந்தை கலைஞருக்காக களத்தில் இறங்கி மக்களிடம் வாக்கு  சேகரித்தவர் செல்வி. இதுவரை வேறு எந்த  ஊடகத்திற்கும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ பேட்டி கொடுத்தது இல்லை. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு தற்போது செல்வி சிறப்பு பேட்டி அளித்து மனதில் உள்ளவற்றை எடுத்துக்கூறி உள்ளார்.

கலைஞரை பற்றி தெரிவிக்கும் போது, "கலைஞரை தெய்வமாக நினைத்துக் கொண்டுள்ளேன்..எனக்கு  வார்த்தைகள் வர வில்லை... என் மனம் மிகவும் வருத்தமாக உள்ளது....என தெரிவித்து உள்ளார்.

ஸ்டாலின் பற்றி பேசும் போது, "நானும் என் அண்ணன் ஸ்டாலினும் "சர்ச் பார்க் பள்ளியில்" சேர்வதற்காக  எங்கள் அத்தான் அழைத்து சென்றார். ஆனால் அண்ணனின் பெயர் ஸ்டாலின் என்று உள்ளதால், அவரை அந்தப்பள்ளியில் சேர்க்க வில்லை. எனவே அப்படிப்பட்ட பள்ளியே ஸ்டாலின் அண்ணனுக்கு தேவை இல்லை என அவரை அங்கிருந்து அழைத்து சென்று வேறு ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்து விட்டனர். 

அப்பா முழு நேர அரசியல் வாதியாக இருந்ததால் எங்கள் படிப்பில் அந்த அளவிற்கு நாட்டம் காண்பிக்க மாட்டார். படிப்பை பொறுத்தவரை எங்கள் அத்தை மற்றும் அத்தான் தான் கவனிப்பார். ஆனாலும், அப்பா  இரவு நேரத்தில் எங்களுடன் கேரம், செஸ் என அனைத்தையும் ஜாலியாக விளையாடுவார். இதே போன்று திருவாரூக்கு குடும்பத்தோட செல்லும் போது, அங்கு பெரிய அண்ணன் நல்லா பாட, அழகிரி அண்ணன்  நல்லா டான்ஸ் ஆட...அந்த தருணம் மிக அழகாக இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.