அம்பானி மனைவி பக்கத்தில் ஜக்கி வாசு தேவ்..! வாடிய முகத்துடன் ராகுல்...! 

நாட்டின் 17 ஆவது பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவி ஏற்க உள்ளார்.இன்று டெல்லியில் தற்போது பிரதமர் பதவி ஏற்பு விழா தொடங்கி உள்ளது. பிரதமருடன் 60 அமைச்சர்கள் பதவி இயக்கவுள்ளதாக உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்க உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.8000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு விருந்தினர்கள் இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.பூடான் மன்னர், நேபால் பிரதமர், கிருக்கிஸ்தான் பிரதமர், மியான்மர் பிரதமர் வின் மின்ட் உள்ளிட்டோரும், இலங்கை அதிபர் மைத்திரி பால் சிறிசேனா,  தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, ரிலைன்ஸ் நிறுவன உரிமையாளர் அம்பானி மற்றும் நீதா அம்பானி உள்ளிட்ட பல்வேறு தொழில் அதிபர்கள் வருகை புரிந்துள்ளனர்.

இதில், கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனன்றால், முதல் வரிசையில் மிக முக்கிய விஐபிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் வரிசையில் தொழிலதிபர் அம்பானி மற்றும் நீதா அம்பானி,அதற்கடுத்தபடியாக ஜக்கிவாசுதேவ் அமர்ந்து உள்ளார். 

மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினி காந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , நட்பு நாடுகளின் தலைவர்கள், நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கு பெற்று உள்ளனர்.