கண்டனம்! கண்டனம்! கண்டனம்! மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிரானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட எமது பதிவு செய்யப்பட்ட சமுதாய அடையாள கொடியை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! என வன்னியர் சங்கம் ஆரம்பித்து வன்னியர் சங்க கொடி மற்றும் அக்கினி சட்டி சின்னத்தை பயன் படுத்துவதாக ராமதாஸின் பசுமை எழுத்தாளன் பசுமைசெழியன் என்பவர் தந்து முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

ஏழு அக்னிசுவாலைகள் தனலாகும் வடிவில் உள்ள வன்னியர்சங்க சின்னத்தை எவனும் பயன்படுத்துவதை, அய்யாவழி போராளிகள் கடுகளவும் ஏற்ப்பதில்லை. வன்னியர் சங்கம் கொடி அமைப்பு, அளவு, சின்னம் எல்லாம் பதிவுடன் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன் வரலாறு தெரியாத சில விஷமிகள், எமது கொடியை தாங்கி செல்வதை, பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு கூட்டத்துக்கு தலைவன் ஆக ஆசைப்படுவன், இன்னொருத்தன் அடையாளத்தை சுமந்து நடமாடுவது செத்த பிணத்துக்கு சமம். 

வெட்கம், சூடு, சொரனை இருப்பின், உப்புள்ள உணவை உண்பவன், எமது தியாகத்தினை சுரண்டுவதை செய்ய மாட்டான். மஞ்சள் நிற துணியில், ஏழு சுவாலைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரையலை கோடுகள் பொருந்திய தீச்சட்டி எனும் அக்கினிகுண்ட சின்னத்தை அய்யா அவர்களுக்கு எதிராக எவனுக்கும் உபயோகபடுத்த அருகதை இல்லை. இந்த ஈனச்செயலை இனி செய்திட்டால்..... வன்னியர்சங்க. தொண்டர்கள் வேடிக்கை பார்த்திடலாகாது.

அநேகமாக கலவரத்தை தூண்ட ஒரு ஒன்றிய அளவிலான கூட்டம் சதி தீட்டுவதை மிகச்சாதாரணமாக பதிலடி கொடுத்து தடுத்திடுவோம்.

இந்த பதிவில் தெளிவாக யார் வன்னிய சங்க கொடியையும், சிட்டத்தையும் பயன் படுத்துவதாக சொல்லாத அவர், தனது அடுத்த பதிவில், நாம் ஒருவனை கண்டிக்க, வேறொருத்தன் உள்ள வந்து பிதற்றுகிறான். பார்த்தால் அதிமுக கூலி. ஒருவேளை பிஜெபி+எடப்பாடியின் கூட்டு பேரமோ ? #கனல்விற்பனை! என்ற ரகசியம்? என நாசோக்காக கூறியிருக்கிறார்.

கனல் விற்பனை என்ற ஹாஷ்டேக் போட்டு வெளிப்படுத்தியுள்ளார். ஆளும் அதிமுக மற்றும் பிஜேபியம் பாமகவுக்கு எதிராக  காடுவெட்டி குரு மகனை தூண்டிவிட்டு வன்னியர் சங்கம் தொடங்குகிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.