kadalur admk mla members walk out against to mc sambath
சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேச ஆரம்பித்தபோது கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பன்ரூட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம், விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைசெல்வன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன், சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், கடலூர் எம்.எல்.ஏ எம்.சி.சம்பத் என 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
கடந்த ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் அமைச்சராக எம்.சி.சம்பத் தொடர்கிறார். ஆனால் இதுவரை தொகுதிக்கோ மாவட்ட்த்திற்கோ எதுவும் செய்யவில்லை என கூறி மற்ற 4 எம்.எல்.ஏக்களும் கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று தொழில் துறை மானியக்கோரிக்கையின்போது, சபாநாயகர், தொழில்துறை அமைச்சர் என்றவுடன் அமைச்சர் எம்.சி. சம்பத் எழுந்து பேச ஆரம்பித்தார்.
உடனே சட்டப்பேரவையில் இருந்த கடலூர் மாவட்ட எம்.எல்.ஏக்கள் மற்ற 4 பேரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைப்பெற்ற சட்டப்பேரவையில் இருந்து மாட்டிறைச்சி விவகாரத்தில் அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அவர்களுடன் அதிமுக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ்செல்வனும் வெளிநடப்பில் ஈடுபட்டார்.
முன்பெல்லாம் பேரவையை கூட்டினால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்ச்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் தற்போது ஆளுங்கட்சியே வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாக்கி கொண்டு வருகிறது.
