43 வருடங்கள் திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கு திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

43 வருடங்கள் திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கு திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திராவிட இயக்க வரலாற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எத்தனையோ பேர் ஈடுபட்டிருந்த போதும், அனைவராலும் `பேராசிரியர்' என அன்போடு அழைக்கப்படுபவர் பேராசிரியர் க.அன்பழகன். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அவரை, `இனமான பேராசிரியர்' என்று அழைத்தார். 43 வருடங்களாக தி.மு.கவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். பின்னர், கடந்த ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பேரனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திமுக பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்;- அ.வெற்றியழகன் திமுக வர்த்தகர் அணி இணைச் செயலாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.