கடவுளை வழிபடுபவர்கள் பக்தர்கள். கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள், கலவரம் செய்பவர்கள் அயோக்கியர்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வேல் யாத்திரைக்கு காவல்துறை பாதுகாப்புடன் திருத்தணி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கடவுளை வழிபடுபவர்கள் பக்தர்கள். கடவுளை வைத்து அரசியல் செய்பவர்கள், கலவரம் செய்பவர்கள் அயோக்கியர்கள். அமைதியும், அன்பும், இணக்கமும் நிறைந்த தமிழ்மண்ணில் வன்முறையின் விதை ஊன்றப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த கலவரக் கும்பலை தடுத்து நிறுத்தவேண்டியது அரசின் கடமை’’ எனப்பதிவிட்டுள்ளார்

.

அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘’இந்திரா காந்தி மண்டையைப் போட்ட போது நீங்கள் ஆடாத வெறியாட்டமா? இந்திராவின் மகன் என்னும் ஒரே அடையாளத்தை வைத்துக்கொண்டு அவரது இளையமகன் சஞ்சய் காந்தி ஆடாத வெறியாட்டமா? ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற சோனியாகாந்தி செய்யாத அக்கிரமமா? கடவுளை வைத்து கலவரம் செய்பவர்கள் நீங்கள்தான்.

முத்தலாக், CAA சட்டங்களுக்கு எதிராக ஒரு மதத்தினரை திசைத்திருப்பி வண்ணாரப்பேட்டையில் கலவரம் நடத்தியவர்கள். உங்களைப் போன்ற தீய எண்ணம் கொண்ட அரசியல் கும்பல் தான்.  அந்த கருப்பர் கூட்டம் அன்று எங்கள் முருகக்கடவுளை இழிவு படுத்தியபோது எல்லாம் அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் இன்று இவர்கள் போராட வேண்டிய நிலை இருக்காது. அப்போதெல்லாம் அமைதியாய் இருந்துவிட்டு இப்போது வந்து பேசுவது மதச்சார்பின்மைக்கு அழகல்ல’’ என எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.