பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டில்களை பார்த்தாலே அலர்ஜியா இருக்கு!சர்வாதிகாரி EPS! இறங்கி அடிக்கும் OPS.!

அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.

Just looking at the water bottle is an allergy... O. Panneerselvam

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்;- ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். கட்சி இந்த நிலைமையில் இருக்க நாங்கள் காரணம் இல்லை. யார் காரணம் என மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவார்கள். பொதுச்செயலாளர் பதவியை பிக் பாக்கெட் அடித்துவிடலாம் என தேர்தலை அறிவித்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க;- தோல்வியடைந்தும் இபிஎஸ் திருந்தவில்லை.. இது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல்.. பண்ருட்டி ராமச்சந்திரன்..!

Just looking at the water bottle is an allergy... O. Panneerselvam

அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும். ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். எங்கள் பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இவரை விட சர்வாதிகார அரசியல்வாதி, யாரும் இருக்க முடியாது. 

இதையும் படிங்க;- சொல்லி அடிக்கும் கில்லியாக பாஜகவை காலி செய்யும் நிர்மல்குமார்.. அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுக்கும் இபிஎஸ்..!

Just looking at the water bottle is an allergy... O. Panneerselvam

இபிஎஸ் அணியிடம் இருந்து அதிமுகவை மீட்பதே எங்கள் நோக்கம்.  நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது  பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம் என கேள்வி எழுப்பினார். எங்களை கட்சியிலிருந்து நீக்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என  ஓபிஎஸ் ஆவேசமாக கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios