Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் செய்யுங்க... தண்டனையை ஏத்துகிறேன்... போலீசாரை திணறடித்த ராஜேந்திர பாலாஜி..!

எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

Just do this ... I accept the sentence ... Rajendra Balaji who stunned the police ..!
Author
Tamil Nadu, First Published Jan 6, 2022, 1:08 PM IST

ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகிய 2 பேருக்கு போன் செய்து, சட்ட உதவிக் கேட்டதாக கூறப்பட்டது. எனவே ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் சீனிவாசன் மற்றும் ராஜவர்மன் ஆகிய இருவரை மதுரை சரக டி.ஐ.ஜி காமினி தலைமையிலான போலீசார் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.Just do this ... I accept the sentence ... Rajendra Balaji who stunned the police ..!

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஹசன் சாலையில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தில் ஏற முயன்ற ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் திடீரென மடக்கி பிடித்து கைது செய்தனர். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மதுரை சரக டி.ஐ.ஜி காம்னி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கே.டி.ராஜேந்திர பாலாஜியை அழைத்து வரப்பட்டதை அறிந்து முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Just do this ... I accept the sentence ... Rajendra Balaji who stunned the police ..!

இதற்கிடையே விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்பாக ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராஜேந்திர பாலாஜியை 15 நாள் அதாவது ஜனவரி 20 வரை மதுரை மத்திய சிறையில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அதிமுக வக்கீல்கள் ஆனந்தகுமார் மற்றும் மாரிஸ்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தபோது, ‘’இது, திமுக அரசால் திட்டமிட்டு பழி வாங்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம். இதற்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவில் 3 முதல் 10 கோடிக்கு மேல் புகார்கள் பெறப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

இருந்து வந்த நிலையில் தற்போது மூன்று கோடி ரூபாய் பொய்யான வழக்கை ஜோடித்து திமுக அரசால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கப்பட்டு உள்ளார். அமைச்சர் மீது புகார் கொடுத்த விஜய் நல்லதம்பி எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை. சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம். விஜய் நல்லதம்பியை பிடித்தால் உண்மை தெரியும்.

Just do this ... I accept the sentence ... Rajendra Balaji who stunned the police ..!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் உள்ளன. அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ்?. அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மட்டும் போலீஸ் கொடுமை செய்யவில்லை. வக்கீல்களையும் போலீஸ் கொடுமை செய்கிறது. இவ்வாறு வக்கீல்கள் கூறினர். ராஜேந்திர பாலாஜியின் வக்கீல்கள் அளித்துள்ள பேட்டி தமிழக காவல் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழக அரசு என பல தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில், வேலை வாங்கித்தருவதாக என் மீது மோசடி புகார் தந்தவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள். என்னிடம் அவர்கள் பணம் கொடுத்தார்கள் என்பதை நிரூபிக்கட்டும்.

அல்லது நீங்கள் நிரூபியுங்கள். அப்படி நிரூபித்து விட்டால் விசாரணையின்றி தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்" என்று பதில் சொல்லி போலீஸாரை திணறடித்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, வேலை வாங்கி தருவதாக யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் உறுதியாக சொல்லி இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

Follow Us:
Download App:
  • android
  • ios