judicial coustody for sukesh chandra till may 12

இரட்டை இலை லஞ்ச வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரை 12 ஆம் தேதி வரை காவலில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 17ஆம் தேதி டெல்லியிலுள்ள தனியார் விடுதியில் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரனிடம் இருந்து பணம் பெற்றதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். 

விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தன் அடிப்படையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

இதற்கிடையே இரட்டை இலை லஞ்ச வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரகேரரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரரை மே 12 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.