பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, டெல்லி ஜே.என்.யூ. பல்கலைகழக நிர்வாகம் விடுதி கட்டணத்தை குறைத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் டெல்லி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதுண்டு.
இதற்கிடையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் உடை கட்டுப்பாடு, மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தை உயர்த்தியது.
அதன்படி ஒரு நபர் மட்டும் தங்கும் அறைக்கான மாதக்கட்டணம் 20 ரூபாயில் இருந்து 600-க்கும், இரண்டு நபர்கள் தங்கும் அறைக்கான மாதக்கட்டணம் 10 ரூபாயில் இருந்து 300-க்கும் உயர்த்தப்பட்டது.
இந்த விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். டெல்லியில் நெரிசல் மிகுந்த முக்கிய சாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆதரவு அளித்துவருகிறது.
திருத்தியமைக்கப்பட்ட விடுதி கட்டணத்தின்படி, ஒரு நபர் தங்கும் அறைக்கான மாதக்கட்டணம் 600 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும், இரண்டு நபர்கள் தங்கும் அறைக்கான கட்டணம் 300 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு நடவடிக்கையால் 16 நாட்களாக நடந்துவரும் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 13, 2019, 9:21 PM IST