சசிகலா அத்தை, நடராஜன் மாமா என வாய்க்கு வாய் அன்போடு அழைத்து வந்த ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

பன்னீர்செல்வத்தை தற்போது அண்ணன் என அழைக்க ஆரம்பித்துள்ளார். பன்னீர்செல்வம் அண்ணன் நன்றாக ஆட்சி புரிந்தார். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்ற புது குண்டையும் தூக்கி போட்டுள்ளார் தீபக்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

தனது அத்தைக்கு விதிக்கப்பட்ட 100 கோடிரூபாய் அபராத தொகையை தானே கட்டிவிட போகதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

காரணம் அந்த 100 கோடிரூபாயும் கடன் வாங்கி கட்டபோவதாக தீபக் அறிவித்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது தேவைகளுக்கே சசிகலா குடும்பத்தை நம்பியுள்ள தீபக் தைரியமாக 100 கோடி ரூபாய் கட்டுவேன் என தெரிவித்திருப்பது, திட்டமிட்ட நாடகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சியை விட்டு பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் மீண்டும் அதிமுகவிற்கு வருவார். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக உள்ளோம் என அடுத்தடுத்து குண்டுகளை தூக்கி வீசியுள்ளார்.

டி.டி.வி தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளர் ஆக பொறுபேற்றுள்ள நிலையில், தீபக் இப்படி பேசியிருப்பது சசிகலா குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.