If Jayalalithaas room is opened this state will fall
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் அறையை திறந்தால் இந்த அரசு கவிழ்ந்துவிடும் என கேரள நம்பூதிரி வேங்கட சர்மா பகீர் செய்தியை வெளியிட்டிள்ளார்.
நேற்றிரவு பிரபல தொலைகாட்சியில் பேட்டியளித்த கேரள நம்பூதிரி வேங்கட சர்மா ஜெயலலிதாவின் ஆவி, எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து, போயஸ்கார்டனில் இருப்பது என்ன என அடுத்தடுத்து சொல்லி ஆளும் தரப்பை பயத்தில் நடுங்கவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது; ஜெயலலிதாவின் ஆவி பழி வாங்க நினைத்த 31 பேரில் கொஞ்சம் கொஞ்சமாக பழி வாங்கி விட்டது. எனினும் ஆவியை அடக்குவதற்காக முயற்சியில் அவர்கள் ஈடுபட்ட காரணத்தால் பழி வாங்கும் மரணத்தின் தன்மை குறைந்திருக்கிறது. 31 பேரும் சேர்ந்துதான் ஆவியை அடக்கும் பூஜைகளை செய்துள்ளனர். என் வாழ்க்கையை சின்னா பின்னபடுத்தியவர்களை நான் விடமாட்டேன் என்று ஜெயலலிதாவின் ஆவி சொல்லியது என்றார்.

இதனையடுத்து, நான் எடுத்த முடிவுகள் எனக்கு எதிராகவே மாறி விட்டதென மனம் உருகி சொல்கிறார். ஜெயலலிதா, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் முத்துசாமியையும் வெளியே அனுப்பியது தவறு என்கிறார்.
ஜெயலலிதா அறையை திறந்தால்...

ஜெயலலிதாவின் ஆவி தற்போது அவரது போயஸ் கார்டன் வீட்டில்தான் இருக்கிறது. அந்த இடத்தை விட்டு அவர் போவதில்லை. எல்லா இடங்களிலும் தெய்வாதீனமாக அவர் உலவி வருகிறார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் அறையை திறந்தால் பின் விளைவுகள் ஏற்படும். அரசு அதிகாரிகள் அறையை திறந்தால் இந்த அரசு கவிழ்ந்துவிடும். போயஸ் கார்டனில் ஏராளமான மந்திரங்கள், பூஜைகள் புதைந்திருக்கிறது.
தங்கம், வைடூரியம், மந்திர சக்திகள்..
இதனையடுத்து போயஸ் கார்டனைபற்றி பேசிய போது பல திடுக் தகவலை கூறினார். அதாவது ஜெயலலிதா அறையில் அறையில் தங்கம், வைடூரியம் என ஏராளமான நகைகள் இருக்கலாம். போயஸ் கார்டனில் பல மந்திர சக்திகள் உள்ளன. பக்தியின் உச்சத்துக்கே போனவர் ஜெயலலிதா.

முதல்வர் என்பதை காட்டிலும் மந்திரங்களை ஈர்ப்பதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். இதனால்தான் எல்லா எதிர்ப்புகளையும் மீறி அவரால் நம்பர் ஒன்னாக இருக்க முடிந்தது.
