Jayalalithaa where is the property of Sasikalas property

ஜெயலலிதா, சசிகலாவின் பினாமி சொத்து எங்கெல்லாம் உள்ளது எனவும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சத்யம் சினிமாஸிடமிருந்து வாங்கியது எப்படி எனவும் விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சரமாரி கேள்வி கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் கட்டுப்பாட்டில் ஜாஸ் சினிமா கம்பெனி இயங்கி வருகிறது. மேலும் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர்.நாளிதழ் விவேக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் மையப்புள்ளி விவேக் தான் என தெரிகிறது. 

இதையடுத்து இன்று விவேக்கை வருமான வரித்துறையினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 