மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெல்லம் கொடுத்து கொன்றிருக்கலாம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் என சந்தேகம் கிளப்பியுள்ளார். 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், ‘’புரட்சித்தலைவி அம்மாவுக்கு காய்ச்சல் என அழைத்து சென்று 75 நாட்கள் கழித்து இறந்து விட்டதாக கூறினார்கள். மாரடைப்பால் இறந்தால் எப்படி ரத்தம் இருக்கும்? மருத்துவமனையில் அம்மாவுக்கு அல்வாவைக் கொடுத்து நோயை தீர்க்காமல் விட்டுவிட்டனர். விஷம் கொடுத்து சாகடிக்க வேண்டும் என்பதில்லை, வெல்லம் கொடுத்து கூட சாகடித்து இருக்கலாம். இதுகுறித்து விசாரிக்க வேண்டும். விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணம் குறித்து ஏற்கெனவே அவர், ’’மத்திய அரசு ஜெயலலிதாவிற்கு தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கு முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உயிரை விட, இந்திய மருத்துவர்களின் கவுரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும். 

அப்பல்லோவில் சசிகலா குடும்பமே தங்கியிருந்தது. அதுவும் ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்ட குடும்பம் அது. சசிகலாவை தவிர அனைவருமே விரட்டியடிக்கப்பட்டர்கள். அந்தக் குடும்பம் மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றியுள்ளது. அந்த குடும்பத்தின் நோக்கம் என்ன? இங்கே தான் மர்மம் அடங்கியிருக்கிறது. அந்த மர்மம் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்" எனக் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.