Asianet News TamilAsianet News Tamil

தீவிரமடையும் ஜெயலலிதா மரணம் விசாரணை.. நாளை விசாரணைக்கு ஆஜராக 4 மருத்துவர்களுக்கு நோட்டீஸ்.

அதேபோல் செல்வி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி விற்பதற்கு முன்பாக தோல் நோய் தொடர்பாக சிகிச்சை அளித்த மருத்துவர் பார்வதி பத்மநாபன் என்ன வகை மருந்துகள் வழங்கினார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளிக்க மற்றொரு பார்வதி பத்மநாபனுக்கு இன்று ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

Jayalalithaa death inquest intensifies .. Notice to 4 doctors to appear for trial tomorrow.
Author
Chennai, First Published Mar 15, 2022, 12:04 PM IST

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரண விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி 4 மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தோல் நோய் தொடர்பாக சிகிச்சை அளித்த மருத்துவர் பார்வதி பத்மநாபன் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க நாளை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவு குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து  ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த ஆணையத்தில் விசாரணைக்கு இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விதித்தது.

இதையும் படியுங்கள்: நாகர்கோவில் பாஜக மூத்த தலைவர் பேரன் அலப்பறை..?? செருப்பு போடாத MLA வுக்கு வந்த சோதனை..

Jayalalithaa death inquest intensifies .. Notice to 4 doctors to appear for trial tomorrow.

இந்நிலையில் மீண்டும் ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்தவகையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் 5 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். மொத்தம் 11 நபர்களில் ஆஜராகாத மருத்துவர்கள் விஜய் சந்திர ரெட்டி, சஜன் கருணாகரன் மற்றும் ராம் கோபால கிருஷ்ணன்  ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. 

அதேபோல் செல்வி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி விற்பதற்கு முன்பாக தோல் நோய் தொடர்பாக சிகிச்சை அளித்த மருத்துவர் பார்வதி பத்மநாபன் என்ன வகை மருந்துகள் வழங்கினார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளிக்க மற்றொரு பார்வதி பத்மநாபனுக்கு இன்று ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Jayalalithaa death inquest intensifies .. Notice to 4 doctors to appear for trial tomorrow.

இதையும் படியுங்கள்: Hijab Verdict: ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும்.. கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இதேபோல அவர் இறப்பதற்கு முன்பாக ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்ட தொடர்பாக மீண்டும்  விசாரிக்க வேண்டும் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, வி.கே சசிகலா ஆகியோரை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டுமென ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான பரிசீலனைக்காக ஜோசப் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Follow Us:
Download App:
  • android
  • ios