முதல்மைச்சர் ஜெயலலிதா நன்றக இருக்கிறார் , விரைவில் வீடு திரும்புவார் என அகில இந்திய மகிளா காங்கிரஸ் நிர்வாகி நடிகை நக்மா பேட்டி அளித்தார். 

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . கடந்த 43 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா மருத்துவர் குழுவினரின் தீவிர சிகிச்சையில் சிறப்பாக தேறி வருகிறார். 

முதல்வர் அனுமதிக்கப்பட்ட அப்போலோவுக்கு ராகுல் காந்திமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நேரடியாக வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோவுக்கு நடிகை விஜய ஷாந்தி வந்து சென்றார்.

பின்னர் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் நக்மா வந்து பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. முதலமைச்சர் உடல் நிலை பற்றி அறிய மருத்துவமனி வந்தேன். மருத்துவர்களை விசாரித்தேன்.

துணை சபாநாயகர் தம்பிதுரையையும் பார்த்தேன். முதலமைச்சர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பிசியோ தெரபி கொடுக்கப்பட்டு வருகிறது. 
விரைவில் அவர் வீடு திரும்புவார் . இவ்வாறு நக்மா தெரிவித்தார்.