தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 25 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அதி நவீன சிகிச்சை மேற்கொண்டால் முதல்வர் விரைவில் குணமைடைவார் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சிங்கப்பூர் செல்ல முதலமைச்சரின், உடல்நிலை ஒத்துழைக்குமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளதால், சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரின் உடல்நிலையை பரிசோதனை செய்யும் சிங்கப்பூர் மருத்துவர்கள்,

முதல்வருக்கு தொடர்ந்து இங்கயே சிகிச்சை அளிக்கலாமா, அல்லது சிங்கப்பூர் அழைத்து சென்று அங்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா என்பதை பரிசோதனைக்கு பின்னர் தெரியப்படுத்துவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.