In the case against Jayalalithaa a gift the Supreme Court has held that the only case against the minister Sengottaiyan
ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் மீது மட்டும் வழக்கு நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது…

1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் அவருக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை உன்னிப்பாக கவனித்த சி.பி.ஐ., பரிசாக பெரும் தொகை எப்படி வந்தது எனக் கூறி ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு, மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதற்கிடையே அழகு திருநாவுக்கரசு உயிரிழந்ததை அடுத்து வழக்கில் இருந்து அவர் விடுக்கப்பட்டார்.இந்தச் சூழலில் பரிசுப் பொருள் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிரவராய் ஆகியோர் அடங்கிய முன்பு இன்று நடைபெற்றது.

அப்போது வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து வழக்கில் இருந்து அவர் விடுக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செங்கோட்டையன் மீது இவ்வழக்கு நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.கோடை கால விடுமுறைக்குப் பிறகு தொடங்கும் பரிசுப் பொருள் வழக்கு இனி இறுதிக்கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…..
