Jayalalitha great leader - Ravishankar Prasad
மறைந்த ஜெயலலிதா சிறந்த தேசியவாதி, தொலைநோக்கு கொண்ட தைரியமிக்கவர் என்றும், தமிழக அரசின் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சென்னை உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125-வது ஆண்டு விழாவில் இன்று கலந்து கொண்டார்.
இதன் பின்னர், மெரினாவில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற அவர், ஜெ. நினைவிடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், வானதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த ஜெயலலிதா ஒரு சிறந்த தலைவர். பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா.
தமிழக அரசின் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு தலையிடவில்லை என்றும் கூறினார்.
சிறந்த தேசியவாதி, தொலைநோக்கு கொண்ட தைரியமிக்கவர் என்றும் மறைந்த ஜெயலலிதாவுக்கு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புகழாரம் சூட்டினார்.
