2033..! "ஜெ" வின் இறப்பு கூட்டலும்  "கருணாநிதியின்" இறப்பு கூட்டலும் ஒன்றே ..! 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்  அரசு மரியாதையுடன் மெரீனாவில் உள்ள  அண்ணா நினைவகம் பின்புறத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

பல லட்ச கணக்கில் மக்கள்  திரண்டு வந்து கலைஞர் மீது தொண்டர்கள் வைத்திருந்த அளவு கடந்த பாசத்தையும் மரியாதையையும் இன்று நிரூபித்து விட்டனர். பல மாநில முதல்வர்கள் முதல் தேசிய கட்சித்தலைவர்கள் வரை  இறுதி சடங்கில் பங்கேற்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம்  இருக்க, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இந்த  மண்ணுலகை விட்டு  மறைந்தார்.அதாவது (Jayalalitha - 5.12.2016 = 2033), இதில் கூட்டுத்தொகை 2033 வருகிறது.

இதேபோன்று, திமுக தலைவர் கருணாநிதியின்  இறப்பு தினமான நேற்றைய தினத்தை வைத்து  கணக்கிடும் போது (Karunanidhi - 7.8.2018 = 2033) இவ்வாறு வருகிறது.

ஆக மொத்தத்தில், ஜெ வின் இறப்பு கூட்டலும், கலைஞர் இறப்பு கூட்டலும் ஒரே எண்ணாக வருகிறது (2033)