Asianet News TamilAsianet News Tamil

ஜெயக்குமார்.. உனக்கு நாக்குல சனி.. இதோடு நிறுத்திக்கோ.. ஐடிரீம்ஸ் மூர்த்தி பகிரங்க எச்சரிக்கை..

திமுகவினர் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல அதனால் அனைத்தையும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே போன்று செயலை தொடர்ந்து செய்தால் முதல்வர் அவரை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்புவார் என தெரிவித்தார். 

Jayakumar .. You have a tongue Saturn .. Stop with this .. Idreams Murthy Public Warning ..
Author
chennai, First Published Feb 21, 2022, 11:48 AM IST

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு நாக்கில் ஏற்பட்ட சனியால் தான் அவர் தேர்தலில் தோற்றார், தோல்வி வெறியால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார் என திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பெரும் 60. 70 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் அனைத்தும் ஜனவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தாலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டதால் அந்த இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 வார்டுகள் உட்பட தமிழகத்தில் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

Jayakumar .. You have a tongue Saturn .. Stop with this .. Idreams Murthy Public Warning ..

புதுவண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள 56வது வார்டு 1174 வாக்குச்சாவடி, சென்னை பெசன்ட் நகர் ஓடை குப்பம் வார்டு எண் 179ல் 5059 வாக்குச்சாவடிகளில்  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரை திருமங்கலம், அரியலூர், ஜெயங்கொண்டம், திருவண்ணாமலை நகராட்சி போன்ற இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை 51 வது வார்டில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி நேரில் வந்து பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமைதியான முறையில் தான் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வட்ட செயலாளர் வன்முறையில் ஈடுபட்டதால்   இன்று மறு வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது என்ற அவர், 15 ஆண்டுகள் அமைச்சராகவும், 4 வருடம் சபாநாயகர் என்று இருந்த ஜெயக்குமார் மனித உரிமை மீறல் செயலை அரங்கேற்றி இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயக்குமார் கடந்த சட்டமன்ற தேர்தலில் 28000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு இந்த பகுதிகளில் தேவையற்ற அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். முடிந்த அளவிற்கு சகிப்புத் தன்மையோடு நாங்கள் இருக்கிறோம் என்றார். மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்க்கு நாக்கில் ஏற்பட்ட சனியால் தான் அவர் தேர்தலில் தோற்றார் இது போன்ற செயலில் ஈடுபட எங்களுக்கும் தெரியும்.

Jayakumar .. You have a tongue Saturn .. Stop with this .. Idreams Murthy Public Warning ..

திமுகவினர் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல அதனால் அனைத்தையும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே போன்று செயலை தொடர்ந்து செய்தால் முதல்வர் அவரை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்புவார் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வி வெறியில் இது போன்ற செயலை ஈடுபட்டிருக்கிறார் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியாக உள்ளது, அதனால் தான் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது ஓரிரு இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதற்கு காரணம் அதிமுக தான் என்ற அவர், ராயபுரம் பகுதியில் கலவரம் நடந்ததற்கு முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐடிரீம் மூர்த்தி தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios