பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதிக்க கூடாது.! உச்ச நீதிமன்றத்தில் அதிரடியாக மனு தாக்கல் செய்த ஜெயக்குமார்

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சுற்றுசூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Jayakumar filed a petition in the Supreme Court protesting the construction of a pen memorial at the Marina beach

மெரினா கடலில் பேனா சின்னம்

சென்னை மெரினா கடலில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் "பேனா" சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சூற்றுசூழல் கருத்து கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திட்டத்தை தொடர தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

மத்திய சுற்றுச்சூழல் துறையும் அனுமதி வாங்கியது. இந்நிலையில் கடலில் பேனா சின்னம் அமைப்பது CRZ மண்டலத்துக்குள் வருவதால், கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பதால் கடலுக்குள் பேனா அமைக்கும் இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி மீனவர்கள் அமைப்பு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

Jayakumar filed a petition in the Supreme Court protesting the construction of a pen memorial at the Marina beach

கடல் வளத்துக்கு பாதிப்பு

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் கருணாநிதி நினைவான பேனா சின்னத்தை மெரினா கடலில் அமைப்பதற்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான டி.ஜெயக்குமார் சார்பில் வழக்கறிஞர் ஆனநத் கண்ணன் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக "பேனா" சின்னம் அமைப்பது என்பது கடல் வளத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 34 கிராமத்தின் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூவம் நதியின் முகத்துவாரம் பகுதி என்பது இறால் மற்றும் நண்டுகள் அதிகம் காணப்படும் பகுதி எனவே இந்த கட்டுமானத்தால் அது பாதிப்படையும் என கூறப்பட்டுள்ளது. 

Jayakumar filed a petition in the Supreme Court protesting the construction of a pen memorial at the Marina beach

பேனா சின்னம்-அனுமதி வழங்கக்கூடாது

குறிப்பாக இந்த திட்டம் மக்களின் வரிப்பணத்தை வீண்டிக்கும் செயல் எனவும்,  இவ்வாறான திட்டத்தை செயல்படுத்தும் முன் நிலையான வளர்ச்சி உள்ளிட்டவை  தொடர்பாகவும் கருத்தில் கொள்ள வேண்டும், ஆனால் இது தொடர்பாக  எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது  மேலும் நாட்டிற்கு மிக மிக முக்கியமானது, அத்தியசியமானது என்று திட்டம் என்றால் மட்டுமே கடலினுள்  கட்டுமானம் செய்யலாம் என மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே மெரினா கடலில பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது இடையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா இறந்தால் தான், தான் முதலமைச்சர் ஆக முடியும் என உள் மனதில் தவமிருந்தவர் ஓபிஎஸ்.! சீறும் ஜெயக்குமார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios