விளையாட்டு பிள்யைாக இருக்கலாம்! வைத்தியலிங்கம் போன்று விளங்காத பிள்ளையாக இருக்கக்கூடாது!ஜெயக்குமார் விமர்சனம்

 உலகிலேயே கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கிய ஒரே அரசு விடியா திமுக அரசு. திமுக அரசு ஒரு கோமாளி, முட்டாள் அரசு. திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் அதிகரித்துவிட்டனர். 

Jayakumar criticized vaithilingam

ஓபிஎஸ், வைத்தியலிங்கம் இருந்ததால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் அண்ணா தொழிற்சங்க ரேவை சார்பில் 310 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Jayakumar criticized vaithilingam

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- திமுகவுக்கு விலைபோய் விட்ட வைத்தியலிங்கம் அதிமுகவை விமர்சிப்பதை ஏற்க முடியாது. வைத்தியலிங்கம் ஊழலில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க திமுக பி-டீமாக மாறியுள்ளார். விளையாட்டு பிள்யைாக இருக்கலாம். வைத்தியலிங்கம் போன்று விளங்காத பிள்ளையாக இருக்கக்கூடாது. ஓபிஎஸ், வைத்தியலிங்கம் இருந்ததால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது.

Jayakumar criticized vaithilingam

கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு அதிமுகவை விமர்சிக்க தகுதியோ, அருகதையோ இல்லை. ஓபிஎஸ், டிடிவி.தினகரன், வைத்தியலிங்கம் ஆகியோரை பொம்மைகள் போன்று பயன்படுத்தி திமுக பொம்மலாட்டம் நடத்துகிறது. ஏற்கனவே தந்தை மகன் ஆகிய இருவரையும் மாற்றுத்திறனாளி ஒருவர் உலக கோப்பையை வென்றதாக  ஒரு டூப்ளிகேட் கோப்பையை காண்பித்து ஏமாற்றியுள்ளார்.

Jayakumar criticized vaithilingam

உலகத்தில் எங்கேயாவது கள்ளச்சார வியாபாரிக்கு ஐம்பதாயிரம்  கொடுத்திருப்பார்களா. கள்ளச்சாராய வியாபாரிக்கு ஐம்பதாயிரம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என்றால் இது எந்த அளவுக்கு முட்டாள்தனம் வாய்ந்த விடியா ஆட்சியாக உள்ளது. அறிவில்லாத திமுக  அரசு தான் இன்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. பல் பிடுங்கி பல்வீர் சிங  விவகாரத்தில் சிறப்பு அதிகாரியான அமுதா ஐஏஎஸை உள்துறை செயலாளராக நியமித்தால் அறிக்கை எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.  

திருமாவளவன் பேசியது குறித்து கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார். அதே சமயம் திருமாவளவனுக்கு  திமுக கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லை. மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு ரோடு போட்டு தரவும் விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் முடியாமல் கடலில் பேனா வைப்பதற்கு என்ன அவசியம். மீனவர்களை வாழ்வாதாரத்தை பாதிக்கும் பேனா வைப்பது எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் நிச்சயமாக இதில் நீதியை வெல்லுவோம் என தெரிவித்தார் 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios