jayakumar about kamal

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், மக்கல் அதை ஏற்பார்களா இல்லையா என்பது தான் முக்கியம் எனவும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருவதால் அமைச்சரவை செம கடுப்பில் இருந்து வந்தது. அதற்கு பொறியாக கமல் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது செய்தியாளர்களிடம் பேசிய கமல் தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது. சிஸ்டம் சரியில்லை. என தெரிவித்தார்.

இதுதான் சாக்கு என தமிழக அமைச்சர்கள் நடிகர் கமலஹாசனை ஒரு பிடி பிடித்து வருகின்றனர்.

இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் கமல் முடிந்தால் அரசியலுக்கு வரட்டும் என வார்த்தையை விட்டார்.

இதைதொடர்ந்து கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டரில், தோற்றால் நான் போராளி; முடிவெடுத்தால் நானும் முதல்வர் என்ற வாசகத்தை பதிவிட்டார்.

Scroll to load tweet…

இந்த பதிவு அரசியலில் அவர் குதிக்க போகிறார் என்பதையே அனைவருடைய புரிதலாகவும் இருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும், மக்கல் அதை ஏற்பார்களா இல்லையா என்பது தான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

மேலும், இன்னும் 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி தொடரும் எனவும், ஜெயலலிதாவின் கனவுகளை இந்த ஆட்சி நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார்.