சென்னையில் நியூஸ் எக்ஸ் சானலுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது அத்தையுடனான பழைய நினைவுகள் பற்றி கூறினார். மக்கள் விரும்பினால் தான் அரசியலில் குத்திக்க தயார் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நேரத்தில் அவரை போன்ற சாயல் கொண்ட பெண் ஒருவர் தன்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கும் படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் விசாரித்த போது அவர்தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என தெரியவந்தது. மறு நாள் ஜெயலலிதா மறைந்த போது அஞ்சலி செலுத்திய அவர் பின்னர் ஜெயலலிதாவின் சமாதிக்கும் வந்து பாலூற்றி அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அவரை காண ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் நியூஸ் எக்ஸ் தனியார் ஆங்கில தொலைக்காட்சி சார்பில் அதன் செய்தியாளர் பிரியம்வதாவுக்கு அவர் பேட்டி அளித்தார், அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் தீபா அளித்த பரபரப்பான பதில்களும்.

தீபா: ஆரம்பத்தில் அத்தையுடன் ஒரே வீட்டில் தான் வசித்தோம் , வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு பின்னர் தான் நிரந்தர பிரிவு ஏற்பட்டது.
உங்கள் கோரிக்கை என்ன ?
தீபா: அத்தையின் உயிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும், போயஸ் இல்லத்தில் தான் நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம். நாங்கள் வளர்ந்த வீடு அது எங்களுக்குத்தான் சொந்தமாக்கப்படணும்.
உங்கள் தம்பி தீபக் அவர்களுடன் இருக்கிறாரே?
தீபக்குக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.தம்பியை எப்படியோ கூட்டிட்டு போய் விட்டார்கள். அத்தையின் அந்திம காரியங்களை ஆண் வாரிசு நிறைவேற்றணும் என்பதற்காக அழைத்து சென்றிருக்கலாம் தம்பியும் போயிருக்கலாம்.

உங்கள் அத்தையை பற்றி சொல்லுங்கள்:
தீபா : அத்தை தான் எங்களுக்கு எல்லாம். அவங்க ஆதரவில் தான் நாங்கள் வளர்ந்தோம். நான் பிறந்தது முதல் அத்தையின் கையை பிடித்துவளர்ந்தேன்.
என்னை அப்பா பள்ளியில் சேர்க்கும் போது நல்ல பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அத்தை வலியுறுத்தினார். எனக்கு தீபா என்று பெயர் வைத்தவரே அத்தை தான் . எனக்கு அத்தை புத்தகங்கள் தான் பரிசளிப்பார். அவர் என்சைக்ளோப்பிட்டியா புத்தகத்தையும் இன்னும் பல புத்தகங்களையும் பரிசாக கொடுத்துள்ளார்.
அத்தை என் தந்தையுடன் பாசமாக பழகுவார். இருவரும் வயதானாலும் சிறு பிள்ளைகள் போல் தான் சண்டை போட்டு கொள்வார்கள். நாங்கள் அதை பார்ட்து ரசிப்போம்.
அத்தையின் வீட்டில் தங்கி தான் பள்ளிக்கு போவேன். 1987 வரை இந்த உறவு இருந்தது. அதன் பின்னரும் நான் வந்து போய் கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் நிரந்தரமாக அத்தையை சந்திக்க முடியாமல் போனது.

கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் அத்தையை சந்தித்தீர்கள்?
அத்தையை பார்க்க முடியாமல் போன போது 2002 ஆம் ஆண்டு பிப்.24 அன்று அத்தை அழைத்ததாக தகவல் கூறி அழைத்து சென்றனர். அன்று அத்தையின் பிறந்த நாள் அன்று முழுதும் அத்தையுடனே இருந்தேன். என்னை எங்கேயும் போககூடாது என்று தன்னுடனேயே அன்று வைத்து கொண்டார்.
எல்லா கதைகளையும் அன்று என்னிடம் மனம் விட்டு பேசினார். வாழ்க்கையில் தனிமையில் அனைவரும் ஒதுக்கிய போது தான் அடைந்த மனக்கஷ்டத்தை மனம் திறந்து அன்று தான் என்னிடம் சொன்னார். அப்போது ஏன் அப்பாவை பிரிந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு மட்டும் பதிலளிக்கவில்லை.
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு என்னை சந்திக்க அழைத்துள்ளார். துரதிர்ஸ்டவசமாக அப்போது நான் லண்டனிலிருந்ததால் சந்திக்க முடியாமல் போனது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு என்ன தோன்றியதோ என்னை பார்க்க அழைத்தார் நானும் ஓடோடி சென்றேன் ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.

உங்களைப்பற்றி சொல்லுங்கள்?
நான் பிறந்தது 1974 ல் போயஸ் தோட்டத்தில் தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். 1987 வரை அத்தையுடன் இருந்தேன். நான் லண்டன் யூனிவர்சிட்டியில் ஜர்னலிசம் படித்துள்ளேன். எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் இல்லை.
உங்கள் லட்சையம் என்ன? ஜர்னலிசம் பற்றி ரிசர்ச் செய்து வருகிறேன். அத்தையின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்து கட்டுரை எழுத இருக்கிறேன்.
அரசியலில் குதிப்பீர்களா? ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட இருக்கிறீர்களா?
மக்கள் விரும்பினால் அரசியலில் குதிப்பேன். ஆர்.கே.நகர் மக்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன். இவ்வாறு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
