Asianet News TamilAsianet News Tamil

இது தான்  ஜெ. வின் கிளீன்- கிரீன் தமிழ்நாடு திட்டமா ? அமைச்சரை அலறவிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்…

Jay clean Greet tamilnadu plan told minister pandiyarajan
Jay clean Greet tamilnadu plan told minister pandiyarajan
Author
First Published Jun 6, 2018, 1:05 PM IST


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கிளீன், கிரீன் தமிழ்நாடு திட்டத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருகிறது என்றும் அதற்கு உதாரணமாக அண்மையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது எனவும்  அமைச்சர் பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்பட்டு வருவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையில் உலக சுகாதார தினத்தையொட்டி செய்தியாளர்களை  சந்தித்த அமைச்சர் பாண்டிய ராஜன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான கிளீன், கிரீன் தமிழ்நாடு திட்டம் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அதற்கு  உதாரணமாக அண்மையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Jay clean Greet tamilnadu plan told minister pandiyarajan

ஆனால் உண்மையிலேயே தமிழகத்தில் என்ன நடக்கிறது? கிளீன்,கிரீன் தமிழ்நாடு என்ற ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

இது தொடர்பாக சென்னையில் உலக சுகாதார தினமான  நேற்று ஆசியா நெட் நியூஸ் சேனல் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான  உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காற்ற மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒரு டன் குப்பையை அப்புறப்படுத்தவும், அழிக்கவும் 1836 ரூபாய்  சென்னை மாநராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பணிகளை முறையாக செய்யாமல் அடையாறு மற்றும் தேனாட்பேட்டை பகுதியில் குப்பைகள் டன் கணக்கில் குவிக்கப்பட்டு வருகிறது,  மேலும் அந்த குப்பைகள் திறந்த வெளியில் எரிக்கப்பட்டு வருகின்றன.

Jay clean Greet tamilnadu plan told minister pandiyarajan

இந்த விஷப் புகையினால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த புகையை சுவாசிப்பதால்  ஆஸ்துமா, புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் பொது மக்களை பாதிப்பதாகவும் தெரிகிறது..

அது மட்டுமல்லாமல் காற்றில் மாசு அளவு 30 பாயிண்ட்டுக்கு குறைவாக இருக்க வேண்டிய நிலையில், குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்றின் மாசு அளவு தற்போது 64 முதல் 70 பாயிண்ட்டுகள் உள்ளது. இந்தப்பணிகளை அதிகாரிகள் முறையாக செய்வதில்லை என்றும், மாநகராட்சி நிர்வாகமும் தங்களது கடமையை செய்வதில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Jay clean Greet tamilnadu plan told minister pandiyarajan

குறிப்பாக அன்னை தெரசாநகர் பகுதியில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்டுவதாகவும், அதை புறநகர் பகுதிக்கு கொண்டு சென்று அழிக்காமல். அங்கேயே எரிப்பதால்  அப்பகுதி முழுவதும் புகை மயமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மக்களின் தற்போதைய அவசியத் தேவை சுத்தமான காற்றுதான். தமிழக அரசு உண்மையிலேயே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மரியாதை  செய்ய வேண்டும் என்றால் மக்களுக்கு சுத்தமான காற்றை தர முன்வர வேண்டும்,

Follow Us:
Download App:
  • android
  • ios