சென்னை கொரோனாவின் தலைநகராக மாறியதற்கு தமிழக அரசே காரணம் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர், சென்னை கொரோனாவின் தலைநகரமாக மாறியதற்கு தமிழக அரசே காரணம் எவ்வித முன்யோசனையும் இல்லாமல் 4 நாள் முழு முடக்கம் அறிவித்து அதன் காரணமாக ஏப்ரல் 25 அன்று தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் நெரிசல் வீதிகளில் காணப்பட்டதே இதற்கு காரணம்.

டெல்லி  மாநாட்டில் கலந்து கொண்ட 500 இஸ்லாமியர்களை, விமானம் மூலமாகவோ அல்லது பஸ் மூலமாகவோ, மீண்டும் தமிழகம் அழைத்து வர வேண்டும், என்று முதல்வருக்கு ஏப்ரல் 23 அன்று காணொலி காட்சி மூலம் ஜவாஹிருல்லா கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின், அரும் பணியால் தமிழக மக்கள் இன்று நிம்மதி காற்றை சுவாசிக்க அவர்களின் கடும் உழைப்பு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.  


ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் கொரோனா பரவ டெல்லி தப்லிஹி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் காரணம் என மறைமுகமாக தமிழக அரசு அறிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் அதனை மாற்றி சென்னை கொரோனாவின் தலைநகராக மாறியதற்கு தமிழக அரசே காரணம் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.