Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ்... முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு..!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

Jallikattu protest cases all withdrawn ... Chief Minister Edappadi announces action
Author
Tamil Nadu, First Published Feb 5, 2021, 3:10 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்ட நிலையில் அந்த அத்தனை வழக்குகளையும் வாபஸ் பெற்றுள்ளார்  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலக நாடுகள் வரை எதிரொலித்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு இளைஞர்கள், அமைப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம், நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது வலியுறுத்தினார்.Jallikattu protest cases all withdrawn ... Chief Minister Edappadi announces action

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விரும்பத்தகாத நிகழ்வுகளான காவல்துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று கூறியுள்ளார். பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் முதல்வர் இதனை அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios