திமுகவினர் எத்தனையோ வழக்கு போட்டு எங்களை ஜெயிலுக்கு அனுப்பினர்,  மதுரையில் ஜெயிலே எங்களுக்காகத்தான் கட்டினர்,ஜெயிலுக்கு போவதில் எங்களுக்கு பயமில்லை, நாங்களெல்லாம் ஜெயில் பறவைகள், போங்கடா போங்க என்று கட்சிப் பணியாற்றயவன் நான் என்று மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உரையாற்றியுள்ளார்.  

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் தனியார் திருமண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ மேடியில் பேசியதாவது:  திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை ஆனால் அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி தேடி வரும்.

திமுகவில் குடும்ப அரசியல் தான் நடக்கிறது, கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், தற்போது, உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நாடினால் தான் திமுகவில் பதவி கிடைக்கும் என்று திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை சுற்றி வருகிறார்கள்.என் மீது கூட திமுகவினர் தங்கள் ஆட்சியில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் போட்டனர். ஜெயிலே எனக்காக தான் கட்டப்பட்டது போங்கடா போங்கனு நாங்களெல்லாம்  ஜெயில் பறவை,  எங்களுக்கு தான் மதுரை ஜெயிலே கட்டியிருக்கு என்று தொடர்ந்து கட்சி பணியினை செய்தேன் என்றார். ஆனால் இன்று நல்ல நிலைமையில் இருக்கேன் என்றார். 2011 நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவினர் தான். இப்போது நீட் தேர்வை பற்றி பேசி குறை கூறி வருகிறார் ஸ்டாலின். 

 

தமிழகத்தில் நடந்த விரோத செயல்கள், சட்டம் ஒழுங்கு செயல்களில் திமுகவினரே சட்டத்தை மீறுவார்கள்புதிய படத்திற்கு காப்புரிமை ஆளுங்கட்சிக்கு தான் தர வேண்டும் என திமுகவினர் வன்முறையில் ஈடுபடுவர். இல்லையென்றால் சிடி விற்று படத்தின் வசூலை கெடுத்து விடுவார்கள். இத்தகைய திமுக இனி என்றும் ஆட்சிக்கு வராது. அதிமுக ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுகிறது, திமுக ஆட்சியில் கழக சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாகும், மற்ற தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகாது.எனவே இளைஞர்களே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர பாடுபட வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உரையாற்றினார்.