முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று பொது மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 25 தினங்களாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முதலமைச்சர் விரைவில் குணமடைய பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்களும் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது டிவிட்டரில்,

புரட்சி தலைவி ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் சேவைக்கு திரும்ப வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.