Asianet News TamilAsianet News Tamil

கலைஞரை இடித்தது போதாதா! ஸ்டாலினையும் நசுக்க வேண்டுமா! துரைமுருகனை கடித்துக் குதறிய அன்பழகன்?

ஜெ.அன்பழகன், அவரிடம் “எத்தனை வருஷமா இப்படி தலைவரின் நிழலாவே இருப்பீங்க? உங்களை விட இளையவங்களுக்கு வழி விடும் எண்ணமே வராதா? தலைவர் கலைஞருக்கு நிழலா இருந்து இப்படித்தான் நிகழ்வுகளில் அவரை இடிச்சுட்டே இருந்தீங்க. இப்போ தலைவராகிவிட்ட தளபதியை நசுக்க துவங்கிட்டீங்க. அடுத்த தலைமுறைக்கு வழிவிடுங்க. 

j anbazhagan tension
Author
Tamil Nadu, First Published Feb 4, 2019, 3:21 PM IST

அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு நாளை ஒட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஸ்டாலின், கனிமொழி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அமைதி ஊர்வலமும் சென்றனர். 

அப்போது ஸ்டாலினின் இடதுகை புறமாக நின்ற கழக பொருளாளர் துரைமுருகன் கூட்ட நெரிசலில் ஸ்டாலினை சற்றே நெருக்கினார். ஸ்டாலினுக்கு இதில் அசெளகரியமானது, பிறகு தனது இடது புறமிருந்த மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் பக்கம் நெருக்கினார். சும்மாவே டென்ஷனாகும் பேர்வழியான அன்பழகன் இதில் ஏகத்துக்கும் டென்ஷாகிவிட்டார். j anbazhagan tension

துரைமுருகனால் கனத்த அந்த உடலை வைத்துக் கொண்டு இப்படியான கூட்ட நிகழ்வுகளில் நடப்பதும், ஸ்டாலினின் மேலே சாயாமல் அவரருகிலேயே நிற்பதும் வெகு சிரமாகதான் இருக்கிறது. இதை ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன், பாலு, வேலு உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் அத்தனை பேரும் நன்கு உணர்ந்தே வைத்துள்ளனர். ஆனால் அவரிடம் நேரடியாக இதை சொல்வதற்கு விருப்பமில்லாமல் ஆனால் அவரது காதுகளுக்கு சென்றடையும் வகையில் சொல்லவும் செய்துவிட்டனர். ஆனாலும் துரைமுருகன் மாறுவதில்லையாம். j anbazhagan tension

கூட்ட நெரிசலில் நிம்மதியா மூச்சுவிட கூட முடியாமல் திவங்கி திணறி, முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு போட்டோவுக்கு துரைமுருகன் போஸ் கொடுப்பதும், நிகழ்ச்சியின் சந்தோஷத்தை கெடுப்பது போலவே இருக்கிறது என்றும் அவர் காதுகளுக்கு போகும் வகையில் போட்டுத் தாக்கிவிட்டனராம். ஆனாலும் அவர் மாறியபாடில்லை. அண்ணா நினைவு தின நிகழ்ச்சியிலும் இப்படித்தான் அமைதியாக இல்லாமல், சிரமமும் கடுப்புமாக முகத்தை வைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினாராம். j anbazhagan tension

ஒரு கட்டத்தில் அவருக்கு அருகிலிருந்த ஜெ.அன்பழகன், அவரிடம் “எத்தனை வருஷமா இப்படி தலைவரின் நிழலாவே இருப்பீங்க? உங்களை விட இளையவங்களுக்கு வழி விடும் எண்ணமே வராதா? தலைவர் கலைஞருக்கு நிழலா இருந்து இப்படித்தான் நிகழ்வுகளில் அவரை இடிச்சுட்டே இருந்தீங்க. இப்போ தலைவராகிவிட்ட தளபதியை நசுக்க துவங்கிட்டீங்க. அடுத்த தலைமுறைக்கு வழிவிடுங்க. j anbazhagan tension

இந்த பரந்த மனசு இல்லாம போனதாலேதானே ஈரோடு மாநாடுல கூட்டத்துல சிக்கி அவ்வளவு அவஸ்தைப்பட்டீங்க? நீங்க எப்பதான் மாறுவீங்க?’ என்று கேட்டேவிட்டாராம். இதை அன்பழகனுக்கு பின்னாடி இருந்த ராசாவும், வேலுவும் கவனித்து, ‘கேட்டாரே ஒரு கேள்வி’ என்று அகமகிழ்ந்தாலும் கூட, நம்ம தலை உருளக்கூடாதுய்யா...என்று மெளனம் காத்துவிட்டார்களாம். மிஸ்டர் துரை! சிரிப்பும், கண்ணீரும் மட்டும் இருந்தா போதாது அடுத்த தலைமுறைக்கு வழி விடுற மனசும் உங்ககிட்டே இருக்கணும்.

Follow Us:
Download App:
  • android
  • ios